நடப்பவை எல்லாம் நன்மைக்கே.
சில சமயம் நாம் நினைப்பது நடக்காவிட்டால், எதையோ தொலைத்துவிட்டதைப்போல மனம் தளர்ந்து, அடுத்து நடக்க வேண்டியதில் கவனம் செலுத்துவதில்கூட முழு ஈடுபாடுடன் நடந்து கொள்ளாமல் இருப்பதால் யாதொரு பயனும் இல்லை.
நடந்துவிட்ட ஒரு நிகழ்வு மாற்றி அமைக்கக்கூடியது அல்ல. இருப்பினும் அந்த நிகழ்வயே மனதில் பல முறை ஓட்டிப் பார்பது இயற்கையே. அப்படி நடந்திராவிடில்,,,,,,,,,,,என்ற எண்ணத்தால் எதிர்மறை பலன்கள்தான் விளையும்.
நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் மேலோங்கி நின்றால், குழப்த்தையும் வருத்தத்தையும் தவிர்கலாம்.
வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்.
No comments:
Post a Comment